Saturday, November 1, 2014

போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் நிற்க தேவையில்லை: தானாக பச்சைக்கு மாறும் விளக்குகள் - பெங்களூருவில் அறிமுகம்

ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறை வாகனங்கள் வரும்போது தானாகவே சிவப்பு சிக்னல் பச்சை சிக்னலாக மாறும் தொழில்நுட்பம் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக பெங்களூர் மாநகர போக்குவரத்துத் துறை காவல் கூடுதல் ஆணையர் எம்.ஏ.சலிம் கூறியதாவது:

சமீபகாலமாக பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் அதி கரித்து வருகிறது. தினமும் சுமார் 2 கோடி எண்ணிக்கையிலான வாகனங்கள் பெங்களூருவின் சாலைகளில் பயணிக்கின்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

புதிய சாலைகளையும் புதிய மேம்பாலங்களையும் கட்டினால்கூட போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. ஆம்புலன்ஸ் வாகனங்கள்கூட போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பி,வேகமாக செல்ல முடிவதில்லை. இதேபோல அவசரமாக செல்ல வேண்டிய � [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்