Wednesday, July 9, 2014

இந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வாருங்கள்; சுவிஸ் வங்கி பற்றி அப்புறம் பேசலாம்

black money in Indiaசுப்ரீம் கோர்ட் உத்தவைத் தொடர்ந்து, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்க ஒரு சிறப்பு புலனாய்வு பிரிவை, மோடி அரசு ஏற்படுத்தி உள்ளது. ஆனால் உண்மையில் கறுப்பு பணம் என்றால் என்ன? அதை வெளியே கொண்டு வருவதற்கான வழிமுறைகள் என்ன? உண்மையில் கறுப்பு பொருளாதாரத்தின் ஒரு சிறிய பகுதியே கறுப்பு பணம். கணக்கில் வராத அனைத்து வருமானங்களும் அதை பயன்படுத்துவதும், முதலீடு செய்வதும் கறுப்பு பொருளாதாரத்தை உருவாக்குகிறது. பொதுவாக கறுப்பு பணம் என்றால், லஞ்சம் போன்ற சட்டவிரோத முறைகளில் கிடைக்கப்பெறும் பணம் என்றே கருதப்படுகிறது. உண்மையில் இது கறுப்பு பணத்தில் ஒரு பகுதியே. எது கறுப்பு பணம்?: ஒரு ஆசிரியரோ, டாக்டரோ தனிப்பட்ட முறையி� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Tuesday, July 8, 2014

மானிய விலை சிலிண்டருக்கு வருவாய் உச்சவரம்பு: மத்திய அரசு பரிசீலனை

xGas_cylinder சமையல் எரிவாயு மானியம் பெரிய அளவுக்குச் சென்று கொண்டிருப்பதால் அந்தச் செலவினத்தைக் குறைக்க மத்திய அரசு மாற்று வழிகளைச் சிந்திக்கத் தொடங்கியுள்ளது. எனவே, மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற வருவாய் உச்சவரம்பு விதிமுறையைக் கொண்டு வர மோடி அரசு பரிசீலனை செய்து வருகிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்து நாளிதழுக்கு இது பற்றி தெரிவிக்கும்போது, "ஏழை எளிய மக்களுக்கான மானிய விலை சிலிண்டர்களை மத்திய அரசு ஒருபோது நிறுத்தாது, மாறாக எந்தப் பிரிவினருக்கு மானிய விலை சிலிண்டர் அளிக்கப்பட வேண்டும் என்பது பற்றிய பொது விவாதம் வைக்கப்படும், அதன் பிறகு அதற்கான வரம்பு நிர்ணயிக்கப்படும்" என்றார். ந� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

எல்லா நலமும் தரும் நடைப்பயிற்சி

walking a good habitஇன்றைய இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில், உடலுழைப்பு என்பது அனைவருக்கும் குறைந்துவிட்டது. நம் உணவு முறையும் மாறிவிட்டது. இயற்கை உணவு வகைகள், நம்மை விட்டு ரொம்பவே விலகிவிட்டன. செயற்கை உணவு வகைகளும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும் நம்மை ஆக்கிரமித்துவிட்டன. இதனால், இளமையிலேயே உடற்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் என்று நோய்களின் வரிசை நீள்கிறது. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால், உடற்பயிற்சி செய்வதுதான் சிறந்த வழி.

உடலுக்கு நன்மை செய்யும் உடற்பயிற்சிகளில், நடைப்பயிற்சி மிகவும் முக்கியமானது; சிரமமில்லாதது; எல்லோருக்கும் ஏற்றது. உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுமைக்கும் ஒரே நேரத்தில் [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Monday, July 7, 2014

உலகின் முதல் 'பறக்கும் விண்வெளி ஆய்வு கூடம்'; நாசா சாதனை

Flying lab space   நியூயார்க், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உலகின் முதல் பறக்கும் விண்வெளி ஆய்வு கூடத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. நட்சத்திரங்களை பற்றி ஆய்வு செய்வதற்காக, மாற்றி வடிவமைக்கப்பட்ட போயிங் 747 ரக ஜெட்லைனர் விமானத்தில் 8 அடி விட்ட பரப்பளவில் 17 டன் எடை கொண்ட தொலைநோக்கியை பொருத்தியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள். சோபியா (ஸ்டிரட்டோஸ்பெரிக் அப்சர்வேட்டரி ஃபார் இன்ப்ராரெட் அஸ்ட்ரானமி) என்றழைக்கப்படும் இந்த அகச்சிவப்புகதிர் தொலைநோக்கியை போயிங் விமானத்தின் பின் பகுதியில் உள்ள ஸ்லைடிங் டோரில் கண்ணாடி மூலம் வானத்தை பார்க்கும் வகையில் நிறுத்தி உள்ளனர். பூமியில் இருந்து 7,624 மைல்களுக்கு அப்பால் அந்தரத்தில் பறக்கும் இந்த ஜெட் விமானம் 12 [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

கிரீன் கார்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி மானியம் வழங்க தயாராகி வரும் மத்திய அரசு

Green cars புதுடெல்லி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பசுமை வாகனங்கள் (ஹைபிரிட் மற்றும் மின்சார கார்களுக்கு) ரூ.14 ஆயிரம் கோடி மானியம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் இதுகுறித்த பரிந்துரை ஒன்றை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. அதில், முழுமையான மின்சார வாகனங்களுக்கு அதிகபட்சமாக 35 சதவீதம் வரை மானியம் வழங்கவும், சார்ஜ் ஏற்றிக் கொண்டு 15 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய பிளக்-இன் ரக மின்சார வாகனங்களுக்கு 25 சதவீத மானியமும் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது, பெட்ரோல், மின்சாரம் என இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் கார்கள் இந்தியாவில் குறைவாகவே கிடைக்கின்றன. உதாரணமாக, எம்.எம். ஸ [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்