மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக தனித்து ஆட்சி அமைத்தது. எனினும், 37 எம்.பி.க்களைக் கொண்ட அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க மோடி முன்வந்தார். ஆனால் ஜெயலலிதா மறுத்து விட்டார் என்ற தகவல் உண்டு. இப்போதும் கூட்டணியற்ற கூட்டணியாக இரு கட்சிகளையும் அவர்களுடைய அரசியல் எதிரிகள் பார்க்கின்றனர்.
தமிழகத்தில் 1998-க்குப் பிறகு எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக பாஜக கூட்டணி ஏற்படும் எனச் செய்திகள் வெளியாவது இயல்பு. இந்தத் தேர்தலிலும் இப்படித்தான் பேசப்பட்டுவந்தது. ஆனால், அது சாத்தியமில்லை என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
இரு கட்சிகளுக்கும் இடை� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்