Saturday, July 16, 2016

காவல் துறையின் வெறியை எப்படித் தணிக்கப்போகிறோம்?

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தினர் மீது, பகலில் கடைவீதியில் பலரும் பார்த்திருக்க காவல் துறையினர் மூன்று பேர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மக்களை அதிர வைத்தி ருக்கிறது. நகை வாங்கச் சென்ற கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட தகராறை விலக்கிவிடச் சென்ற காவலர்கள், தங்கள் பேச்சை அவர்கள் கேட்காததால் தாக்கியதாகக் காரணம் சொல்லியிருக்கிறார்கள். இதேபோல, சென்னை - திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் பெண் காவலரால் தாக்கப்பட்டிருக்கிறார். அதிர்ச்சியில் சிகிச்சை பெறாமல் வீடு திரும்பிய அப்பெண்ணுக்கு, வழியிலேயே பஸ்ஸில் பனிக்குடம் உடைந்திருக்கிறது. காவல் துறையினர் இதற்கும் காரணமும் பதிலும் வைத்திருக்கிறார்கள். இந்த இரு சம்பவங்களிலும் காவல் துறையினரின் மனிதத்தன்மையற்ற, மிருகத்தன� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Wednesday, July 13, 2016

அளவுக்கு மிஞ்சினால்...!

poisones medicines

மனித இனம் ஒரு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை யாருமே சட்டை செய்வதாகத் தெரியவில்லை. மருத்துவர்கள், விஞ்ஞானிகள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எல்லோரையுமே ஓர் இனம்புரியாத அச்சம் பற்றிக் கொண்டிருக்கிறது. காரணம், வேறொன்றுமல்ல. நுண்ணுயிரிகள் (பாக்ட்டீரியாக்கள்) மருந்துகளுக்குக் கட்டுப்படாத நிலைமை ஏற்பட்டு வருகிறது. நுண்ணுயிரிக் கொல்லி (ஆன்டிபயாட்டிக்) மருந்துகளுக்குப் பல நுண்ணுயிரிகள் (மைக்ரோப்ஸ்) எதிர்ப்பு சக்தி பெற்றுவிட்ட நிலைமை காணப்படுகிறது.

பாக்டீரியாக்கள் என்பது பரவலாக அறியப்படும் நுண்ணுயிரிகள். அவற்றைக் கட்டுப்படுத்தத் தரப்படும் மருந்துகள் காலப்போக்கில் இயற்கையாகவே எதிர்ப்புச் சக [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

இந்தியாவிர்க்கு தேவை, சிந்தனை மாற்றம்!

agriculture-industry-india

ஆப்பிரிக்க நாடுகளில் பயணத்திலிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மொசாம்பிக் நாட்டுடன் பருப்பு இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்படி 2016-17 நிதியாண்டில் ஒரு லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்படும். நான்கு ஆண்டுகளில் இந்த அளவு இரட்டிப்பாகும். பருப்பு இறக்குமதி செய்வதோடு, இந்திய வேளாண் துறையின் ஆலோசனை, தொழில்நுட்ப உதவியும் மொசாம்பிக் நாட்டுக்கு வழங்கப்படும்.

ஏற்கெனவே, மியான்மரிலிருந்து பருப்பு இறக்குமதி செய்ய ஒப்பந்தமாகியுள்ளது. அண்மையில் பருப்பு விலை கிலோ ரூ.200 வரை உயர்ந்ததால், மத்திய அரசு உடனடி நடவடிக்கையில் இறங்கியது. பதுக்கல் வியாபாரிகளிடமிருந்து பருப்பு மூட்டைகள் பறிமுதல் செ� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Tuesday, July 12, 2016

எது ஊடக அறம்?

JusticeSocialMedia

மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் எழுந்துள்ள முதன்மையான கேள்வி, ஊடக அறம் என்றால் என்ன என்பதுதான். சுவாதியைக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்பாக நிறுத்தியபோது, "சுவாதி கொலை வழக்கை நடத்துவது நீதிமன்றமா, ஊடகமா? வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களும், படங்களும் எவ்வாறு உடனுக்குடன் வெளியாகின?' என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

மும்பைத் தாக்குதலில், தாஜ் ஓட்டலில் பலரை பிணைக்கைதிகளாக வைத்திருந்த பயங்கரவாதிகளுக்கு, வெளியே காவல் துறை, ராணுவம் இவற்றின் நடவடிக்கை அனைத்தும் தொலைக்காட்சி வழியாக நேரடியாக பார்க்க முடிந்த அவலமும், அதற்கான கண்டனமு [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்