மனித இனம் ஒரு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை யாருமே சட்டை செய்வதாகத் தெரியவில்லை. மருத்துவர்கள், விஞ்ஞானிகள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எல்லோரையுமே ஓர் இனம்புரியாத அச்சம் பற்றிக் கொண்டிருக்கிறது. காரணம், வேறொன்றுமல்ல. நுண்ணுயிரிகள் (பாக்ட்டீரியாக்கள்) மருந்துகளுக்குக் கட்டுப்படாத நிலைமை ஏற்பட்டு வருகிறது. நுண்ணுயிரிக் கொல்லி (ஆன்டிபயாட்டிக்) மருந்துகளுக்குப் பல நுண்ணுயிரிகள் (மைக்ரோப்ஸ்) எதிர்ப்பு சக்தி பெற்றுவிட்ட நிலைமை காணப்படுகிறது.
பாக்டீரியாக்கள் என்பது பரவலாக அறியப்படும் நுண்ணுயிரிகள். அவற்றைக் கட்டுப்படுத்தத் தரப்படும் மருந்துகள் காலப்போக்கில் இயற்கையாகவே எதிர்ப்புச் சக [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment