Monday, August 10, 2015

குடி குடியைக் கெடுக்கும்

பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. 9-ம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள், பள்ளிக்கு வந்ததும் வகுப்புக்குச் செல்லாமல் ஓரமாக இருக்கும் கழிவறையின் பக்கம் ஒதுங்கி நின்று கொண்டார்கள். டாஸ்மாக் கடை திறந்ததும் மது வாங்கி வந்து, பள்ளி வளாகத்திலேயே உட்கார்ந்து, ஊறுகாயைத் தொட்டுக்கொண்டு குடிக்க ஆரம்பித்தனர். இதைப் பார்த்த சில சீனியர் மாணவர்கள் எச்சரிக்க, அது மோதலாக உருமாறியது. இரு தரப்பும் அடித்துக்கொள்ள, ஆசிரியர்கள் கவனத்துக்கு விஷயம் சென்றது. அவர்கள் பதறியடித்து ஓடிவந்தபோது, அத்தனை பேரும் ஓடிவிட்டனர். அப்போது போதை மிதப்பில் எழுந்து ஓட முடியாமல் விழுந்துகிடந்த மாணவனுக்கு, போதை தெளிய வைத்தியம் பார்த்து, பெற்றோரிடம் ஒப்படைப்பதே பெரும்பாடாகிவிட்டது பள்ளி நிர்வாகத்துக்கு. [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment