ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி இந்தியாவைவிட பாகிஸ்தான், வங்கதேசம் மகிழ்ச்சியான நாடுகளாக உள்ளன.
2015-ம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி நிலவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 158 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக முதலிடத்தைப் பிடித்துள்ளது ஸ்விட்சர்லாந்து. 2-வது இடத்தில் ஐஸ்லாந்தும், 3-வது இடத்தில் டென்மார்க்கும், 4 மற்றும் 5-வது இடத்தில் நார்வே, கனடா நாடுகளும் உள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியா 117-வது இடத்தில் இருக்கின்றது. கடந்த 2013-ல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியா 111-வது இடத்தில் இருந்தது. இப்போது 6 இடங்கள் பின்தங்கியதால் 117-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ப [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment