"இந்திய அரசியல் சட்டத்தின் முகவுரையில் உள்ள 'சமத்துவம்', 'மதச்சார்பின்மை' என்ற சொற்கள் இனியும் தொடரத்தான் வேண்டுமா?" என்றும் "இதுகுறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தலாம்" என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியிருப்பதை மதச்சார்பின்மை மீது தொடுக்கப்படும் மறைமுகத் தாக்குதலாகவே கருத வேண்டும்.
டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில், ஓர் அலங்கார ஊர்தியின் பிரச்சாரப் படத்துக்குக் கீழே, இந்தியக் குடியரசு சட்டத்தின் முகவுரையிலிருந்து 'இறையாண்மை மிக்க ஜனநாயகக் குடியரசு' என்ற வாசகங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. 'சமத்துவம்', 'மதச்சார்பின்மை' ஆகிய இரண்டு சொற்களும் விடுபட்டிருந்தன. எதிர்க் கட்சிக� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment