தீவிரமான சூறாவளி, கடுமையான அனல் காற்று, வரலாறு காணாத வறட்சி, சீறிப் பொங்கும் கடல் மட்டம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் இனி உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கானவர்கள் அகதிகளாக வேறு நாடுகளில் இடம் தேடப் போகிறார்கள்; அப்படி வெளியேறப்போகும் ஏழைகளும் நலிவுற்ற பிரிவினரும் எந்த நாட்டிலும் அகதி என்று கூறி புகலிடம் தேடக்கூட 'ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மாநாடு' சட்டப்பூர்வ உரிமையைத் தரவில்லை என்பது வருத்தத்துக்குரியது.
திட்டவட்டமாகத் தெரியவில்லை என்றாலும் இந்த ஆண்டில் இதுவரையில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் சிரியா, ஆப்கானிஸ்தான், எரித்ரியா போன்ற நாடுகளில் நடந்துவரும் உள்நாட்டுச் சண்டை காரணமாக வ� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment