Monday, June 30, 2014

சுவிஸ் வங்கி பணம் கரைகிறதா?

Swiss bank money புதுடில்லி : சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தைப் பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்த பட்டியலை தரத் தயார் என, அந்நாடு அறிவித்துள்ளதால், பட்டியலை விரைவாக வழங்குமாறு, மத்திய அரசு, சுவிஸ் நாட்டுக்கு கடிதம் எழுதிஉள்ளது. முறைகேடான பணம் இந்தியாவில் முறைகேடாக பணத்தை சம்பாதித்த சிலர், அந்தப் பணத்தை இங்கு வைத்திருந்தால் பிரச்னையாகும் என கருதி, முறைகேடான வழிகளில், சுவிஸ், சுவீடன், ஜெர்மனி போன்ற நாடுகளின் வங்கிகளில் பதுக்கியுள்ளனர்.சுவிஸ் நாட்டு வங்கியில் உள்ள அந்த பணத்தை மீட்டு இந்தியா கொண்டு வர, முந்தைய, பிரதமர், மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போதைய நிதியமைச்சர், சிதம்பரம், நான்கு முறை கடிதங்கள் எழுதிய� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Sunday, June 29, 2014

உலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ!

ISRO, which have turned the world to see!  

"திங்கறதுக்கே சோறு இல்லையாம்… இதுல இவனுக ராக்கெட் விடுறானுகலாம்… ராக்கெட்டு…" இதுதான் ஒவ்வொரு முறையும் ராக்கெட் விண்ணில் ஏவப்படும்போது டீக்கடை விமர்சகர்களின் கருத்தாக இருக்கும். அவர்களின் வாயை அடக்கும் விதமாகவும், ராக்கெட் ஏவுவதினால் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவிற்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவும், 5 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ நாளை (திங்கள்கிழமை) விண்ணில் ஏவவுள்ளது. அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும், அதன் செயல்பாடுகள் குறித்து பார்க்கலாம்.

நோக்கம்:

சுயமாக ஒரு செய [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Saturday, June 28, 2014

ஆளில்லா குட்டி விமானம் மூலம் பிட்ஸா விநியோகம்: ரஷ்ய நிறுவனம் புதுமை

Russian Institute of Innovation deliveries Pitsa through mini unmanned aircraftஆளில்லா விமானம் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு பிட்ஸா விநியோகம் செய்வதை வெற்றிகரமாக நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது ரஷ்யாவைச் சேர்ந்த டூடு பிட்ஸா நிறுவனம்.

ஏற்கெனவே இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பல நிறுவனங்கள் சோதனை முறையில் ஆளில்லா விமானம் மூலம் பிட்ஸா விநியோகம் செய்துள்ள போதும், முறைப்படி அதை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.

ரஷ்யாவின் வடக்குப் பகுதியிலுள்ள சிக்டிவ்கர் நகரத் தில் இயங்கிவரும் டூடு நிறுவனம், ஆளில்லா விமானம் மூலம் பிட்ஸா விநியோகிப்பதை வீடியோ எடுத்து, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இது வெறும் விளம்பர யுக்தி அல்ல, தொடர்ந்து நடைம [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Wednesday, June 25, 2014

குறைந்த விலை மருந்துகளை மக்கள் எளிதாக பெற பஸ் நிலையம், கடை வீதிகளில் 'அம்மா' மருந்தகம்?

mother pharmacy சென்னை : தமிழக அரசின், 'அம்மா' மருந்தகம் திட்டம், இன்று துவக்கி வைக்கப்படுகிறது. மக்கள் எளிதாக மருந்து வாங்கிச் செல்லும் வகையில், அம்மா மருந்தகங்களை, பேருந்து நிலையங்கள், கடை வீதிகளிலும் திறக்க வேண்டும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 'தமிழகம் முழுவதும், குறைந்த விலையில் மருந்து கிடைக்கும் வகையில், அம்மா மருந்தகம் திறக்கப்படும்' என, அரசு அறிவித்தது. அறிவித்து பல மாதங்கள் ஆகியும், திறக்கப்படவில்லை. அதற்காக கட்டிய கடைகள் எல்லாம் முடங்கின. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில், கடந்த வாரம், படத்துடன் செய்தி வெளியானது.இந்நிலையில், சுறுசுறுப்படைந்த அரசு, பணிகளை முடுக்கி விட்டு, கூட்டுறவு துறை மூலம், 100 அம்மா மருந்தகங்களை இன்று திறக்கிறது. குறிப்பிட� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

தெளிவான உச்சரிப்புடன் உலகில் முதன்முதலாக செய்தி வாசிக்கும் பெண் ரோபோ

female robot reading the news

உலகில் முதன்முதலாக செய்தி வாசிக்கும் ரோபோ ஒன்றை செய்து ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். செய்தி வாசிக்கும் பெண் போலவே மிக அழகாக தெளிவான உச்சரிப்புடன் செய்தி வாசிக்கும் ரோபோவை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

டோக்கியோ தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவை இஷ்கியுரோ என்ற விஞ்ஞானி தனது குழுவினர்களுடன் இணைந்து செய்த ரோபோவை செய்தி வாசிக்க செய்து அசத்தினார். இந்த ரோபோவுக்குள் செய்திகளின் டேட்டாக்களை பதிவு செய்துவிட்டால்[...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு

dip in the river gangaஐதராபாத் : நாட்டின் புனித நதிகளுள் ஒன்றான கங்கை நதியில், நீராடினால், புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பாபா அணு ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கங்கை நதி தண்ணீரின் தூய்மைத்தன்மை குறித்து, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்படும் நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறை, கடந்த ஆண்டில் ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கங்கை நதி தண்ணீரில், புற்றுநோய்களை உருவாக்கும் கார்சினோஜன்கள் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு குறித்து, நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறையின் தலைவர் கூறி [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Tuesday, June 24, 2014

மொபைல்போன் கதிர்வீச்சால் மனித உடலுக்கு பதிப்பில்லை: ஆய்வில் தகவல்

mobile radiation effect on the human body   கொல்கத்தா: மொபைல் போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் மனித உடலுக்கு தீங்கு ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. செல்லுலர் ஆபரேட்டர் அசோசியேஷன் சார்பில் மொபைல் போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு குறித்து நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கதிர்வீச்சல் பாதிப்பில்லை என்று அறியப்பட்டது. 'மொபைல்போன் டவர்கள் மூலம் கதிர்வீச்சு பரவுவதாகவும், அதனால் கேன்சர் உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்புள்ளதாகவும் ஆதாரமற்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டன. ஆனால் அனைத்து விஞ்ஞானபூர்வமான சோதனைகளுக்கு பின்னர் மொபைல்போன் கதிர்வீச்சால் மனித உடலுக்கு தீங்கு ஏற்படாது என கண்டறியப்பட்டுள்ளது. தினகரன்

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Monday, June 23, 2014

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது : வனத்துறை அறிவிப்பு

Vedanthangal Bird Sanctuary பறவைகள் இல்லாததால் இதுவரை சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்படுவததாக வனத்துறை அறிவித்துள்ளது. மேலும், அடுத்த சீசனுக்காக வரும் நவம்பரில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மீண்டும் திறக்கப்படும் என்றும் வனத்துறை தெரிவித்தள்ளது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்றாக, திகழ்வது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் கண்டுக் களிக்கும் இடமாக இது இருந்து வருவது சிறப்பு. ஏரிகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது வேடந்தாங்கல் ஏரி. இங்கு பறவைகள� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Saturday, June 21, 2014

மோடி அரசின் ஹிந்திக் கொள்கைக்கு ஜெயலலிதாவும் எதிர்ப்பு

Jayalalithaa  Modi

மோடி அரசு, மத்திய அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் சமூக ஊடகங்களில் முதலில் ஹிந்தியைப் பயன்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே இது குறித்து திமுக தலைவர் மு.கருணாநிதி தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் ஒன்றில், மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து வெளியிட்டிருக்கும் அதிகார பூர்வ உத்தரவுகள் இரண்டை சுட்டிக்காட்டி, இவை மத்திய அரசு அதிகாரிகள் ,தங்கள் அதிகார பூர்வ சமூக ஊடகக் கணக்குகளிலிருந்து அனுப்பும் செய்திகளை, கட்டாயமாக ஹிந்தியில் அனுப்பவ [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Friday, June 20, 2014

வெளிநாடுகளில் உள்ள இந்திய கறுப்பு பணத்தின் அளவு ரூ.120 லட்சம் கோடி : ஆய்வில் தகவல்

Indian black money abroadபுதுடில்லி : வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தின் அளவு சுமார் ரூ.120 லட்சம் கோடி என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கணக்கிடப்பட்டுள்ளது. அசோசம் தொழில்துறை நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு கறுப்பு பணத்தின் அளவு இந்தியாவின் சராசரி உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2013-14ம் நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி ரூ.114 லட்சம் கோடி ஆகும். இந்தியர்களின் ஏராளமான கறுப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும், அவற்றின் சரியான மதிப்பு எவ்வளவு என இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. இதற்கு முன் தரப்பட்ட க� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Wednesday, June 18, 2014

இராக்கும் இந்தியாவும்

 Iraq and India இராக் மீண்டும் தலைப்புச் செய்தியாகி விட்டிருக்கிறது. கடந்த ஜனவரியில் பல்லுஜாவைக் கைப்பற்றிய சன்னி முஸ்லிம் தீவிரவாதக் குழுவினர், இப்போது திக்ரித்தையும், இராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலையும் கைப்பற்றியிருக்கின்றனர். ஐ.எஸ்.ஐ.எல். என்று தங்களை அழைத்துக் கொள்ளும், அல் கொய்தாவிலிருந்து பிரிந்து வந்த இந்தத் தீவிரவாதக் குழுவினரின் குறிக்கோள், சன்னி முஸ்லிம் பிரிவினர் அதிகமாக வாழும் கிழக்கு சிரியாவும் மேற்கு இராக்கும் இணைந்த இராக் லெவான்ட் என்கிற இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது. அடுத்த சில மாதங்களில் அல்லது வருடங்களில், இராக்கின் வரைபடம் இப்போது இருப்பதுபோல காணப்படுமா என்பது ச� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

இலங்கை அரசை கண்டித்து போராட்டம் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கைது

இலங்கையில் முஸ்லிம்கள் மீது புத்த மதத்தினர் மற்றும் அரசு ஆதரவு பெற்ற குழுக்கள் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

xsri_1955318h.jpg.pagespeed.ic.CLCr6Si3Qzஇலங்கையில் வசிக்கும் முஸ்லிம்கள் மீது நடந்த தாக்கு தலைக் கண்டித்து சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அறிவித்து இருந்தது. அதன்படி, அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கோவை ரஹமத்துல்லா தலைமையில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி அருகே திரண்டனர். இலங்கை அரசுக்கும் அதிபர� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Tuesday, June 17, 2014

சூரிய ஆற்றலில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம்

சூரிய ஓளி மற்றும் வெப்பத்திலிருந்து நேரடியாக பெறப்படும் ஆற்றல் சூரிய ஆற்றல் (solar energy) எனப்படுகிறது. சூரிய ஆற்றல் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாகவும் மற்ற மீள உருவாக்கக்கூடிய ஆற்றல்களான, காற்றாற்றல், நீர்மின்னியல், மற்றும் உயிரியல் தொகுதி (biomass) ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு பெருமளவில் துணை புரிகிறது. பூமியில் விழும் சூரிய ஆற்றலில் மிகவும் சிறிய பகுதியே ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது. சூரிய ஆற்றலில் இருந்து மின்சாரம் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகிறது.
  1. சூரிய ஓளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் (Photovoltaic).
  2. சூரிய வெப்பத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் (Solar Thermal).

சூரிய ஒளி ஆற்றல்

[...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Monday, June 16, 2014

மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம்: தமிழக அரசு ஏற்பாடு

மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்கிறது. இதற்காக ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரி ஒருவர் கூறினார். தமிழ்நாட்டில் அனல் மின்நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலை போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்த போதிலும் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு முழுமையாக நீங்கவில்லை. இப்போது பரவலாக மழை பெய்வதாலும், தென்மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதாலும் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கிறது. அதனால் மின்சார தட்டுப்பாடும் கணிசமாக குறைந்துள்ளது. solar power for homes (1)இருப்பினும், மின்சார தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்குவதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

இலங்கையின் அளுத்கமவில் கலவரம்: முஸ்லிம்களின் வீடுகளும் மசூதிகளும் எரிக்கப்பட்டுள்ளன

riot against muslims in srilanka

இலங்கையின் களுத்துறை மாவட்டம் அளுத்கம பகுதியில் கடும்போக்கு பௌத்த குழு ஒன்றுக்கும், அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையின் நடந்த மோதலை அடுத்து அங்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு பௌத்த மத குருவின் வாகன ஓட்டுனர் ஒருவருக்கும், சில முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் சிறு கைகலப்பு நடந்ததை அடுத்து, அங்கு இன்று பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவுக்கு ஊர்வலம் ஒன்றை நடத்த பொலிஸார் அனுமதி அளித்ததை அடுத்தே இந்த மோதல்கள் நடந்துள்ளன. அந்தக் கூட்டத்தை அடுத்து பொதுபல சேனா அமைப்பினர் முஸ்லிம்களின் பகுதிகளை நோக்கி, முஸ்லிம் எதிர்ப்ப� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Sunday, June 15, 2014

சதாம் உசேனும் பாபிலோனியாவும் - ஈராக்

1967-ல் நடந்த அரபு-இஸ்ரேல் ஆறு நாள் போரானது அரபு பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரபு நாடுகள் எல்லாம் தங்களின் சுய-பாதுகாப்பு குறித்த மீள் உணர்வை ஏற்படுத்திக் கொண்டன. ஈராக்கின் அதிபர் ஹசன் அல் பக்கர் சதாமின் தாய்வழி உறவினர். ஓரளவு அனுசரணைத்தன்மை கொண்டவர். அதிகாரம் குறித்த தெளிவுடையவர். இருந்தும் சதாம் உசேன்தான் இவருக்கு ஆட்சியமைப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினார். அந்தத் தருணத்தில் ஈராக்கின் தலைமை இராணுவத் தளபதியாகவும், புரட்சிகரக் குழுவின் தலைவராகவும் சதாம் இருந்தார். 1978-ல் சூயஸ் கால்வாய் சம்பந்தமாக இஸ்ரேல்- எகிப்து இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இது மற்ற பிராந்தியங்களின் மீது பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. சதாம் இதைக் கடுமையாக எதிர்த்தார். மற்ற அரபு நாடுகள் எகிப்துடனான தம் உறவைத் துண்டிக்க வேண்டும் என� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Tuesday, June 10, 2014

வீட்டுக்கே வரும் ஆர்கானிக் பொருட்கள்

Organic productsஇயற்கை சார்ந்த வாழ்க்கை முறைக்குத் திரும்பும் போக்கு தற்போது அதிகரித்திருக்கிறது. ஆர்கானிக் உணவு எனப்படும் ரசாயன எச்சங்கள் இல்லாத, இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவு பொருட்கள் மீது கவனம் திரும்பியிருப்பதும் அதன் ஒரு வெளிப்பாடுதான். இந்த ஆர்கானிக் உணவு மூலப்பொருட்களை எங்கே வாங்குவது, எப்படி வாங்குவது என்று 'பசுமை அங்காடி' பகுதி வழிகாட்டும். தொடர்புக்கு: uyirmoochu@thehindutamil.co.in

ஆர்கானிக் பொருட்களைத் தொலைபேசி, இணையதளம் வழியாக வாங்க வழி செய்கிறது, சென்னை தி.நகரில் இருக்கும் எஃப் 5 ஸ்டோர் (F5 store).

"பஞ்சப் பூதங்களின் எண்ணிக்கை, புத்துணர்ச்சி (F5- Refresh) ஆகியவற்றைச் சுருக்கமாகக் குறிக்கும் வகையில்தான் எஃப் 5 (F 5) என்ற பெயரை வைத்தோம். ஒரு தொலைபே� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்