1967-ல் நடந்த அரபு-இஸ்ரேல் ஆறு நாள் போரானது அரபு பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரபு நாடுகள் எல்லாம் தங்களின் சுய-பாதுகாப்பு குறித்த மீள் உணர்வை ஏற்படுத்திக் கொண்டன. ஈராக்கின் அதிபர் ஹசன் அல் பக்கர் சதாமின் தாய்வழி உறவினர். ஓரளவு அனுசரணைத்தன்மை கொண்டவர். அதிகாரம் குறித்த தெளிவுடையவர். இருந்தும் சதாம் உசேன்தான் இவருக்கு ஆட்சியமைப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினார். அந்தத் தருணத்தில் ஈராக்கின் தலைமை இராணுவத் தளபதியாகவும், புரட்சிகரக் குழுவின் தலைவராகவும் சதாம் இருந்தார். 1978-ல் சூயஸ் கால்வாய் சம்பந்தமாக இஸ்ரேல்- எகிப்து இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இது மற்ற பிராந்தியங்களின் மீது பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. சதாம் இதைக் கடுமையாக எதிர்த்தார். மற்ற அரபு நாடுகள் எகிப்துடனான தம் உறவைத் துண்டிக்க வேண்டும் என� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment