இலங்கையின் களுத்துறை மாவட்டம் அளுத்கம பகுதியில் கடும்போக்கு பௌத்த குழு ஒன்றுக்கும், அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையின் நடந்த மோதலை அடுத்து அங்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு பௌத்த மத குருவின் வாகன ஓட்டுனர் ஒருவருக்கும், சில முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் சிறு கைகலப்பு நடந்ததை அடுத்து, அங்கு இன்று பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவுக்கு ஊர்வலம் ஒன்றை நடத்த பொலிஸார் அனுமதி அளித்ததை அடுத்தே இந்த மோதல்கள் நடந்துள்ளன. அந்தக் கூட்டத்தை அடுத்து பொதுபல சேனா அமைப்பினர் முஸ்லிம்களின் பகுதிகளை நோக்கி, முஸ்லிம் எதிர்ப்ப� [...]மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment