புதுடில்லி : சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தைப் பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்த பட்டியலை தரத் தயார் என, அந்நாடு அறிவித்துள்ளதால், பட்டியலை விரைவாக வழங்குமாறு, மத்திய அரசு, சுவிஸ் நாட்டுக்கு கடிதம் எழுதிஉள்ளது. முறைகேடான பணம் இந்தியாவில் முறைகேடாக பணத்தை சம்பாதித்த சிலர், அந்தப் பணத்தை இங்கு வைத்திருந்தால் பிரச்னையாகும் என கருதி, முறைகேடான வழிகளில், சுவிஸ், சுவீடன், ஜெர்மனி போன்ற நாடுகளின் வங்கிகளில் பதுக்கியுள்ளனர்.சுவிஸ் நாட்டு வங்கியில் உள்ள அந்த பணத்தை மீட்டு இந்தியா கொண்டு வர, முந்தைய, பிரதமர், மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போதைய நிதியமைச்சர், சிதம்பரம், நான்கு முறை கடிதங்கள் எழுதிய� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment