சிலரைப் பார்க்கும்போது சாதிக்கலாம் என்று தோன்றுகிறது. சிலரைப் பார்க்கும்போது சாதித்த விதத்தை, அவர்கள் நமக்குப் போதிக்கலாமே என்று கேட்கத் தோன்றுகிறது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஆவுல் பகீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் 'கலாம் அய்யா போல் சாதிக்கலாம்' என்ற எண்ணம் நமக்குள்ளும் வருகிறது. காலம், காகிதத்தைக் கிழிப்பதாய் நினைத்து ஒரு கவிதையைக் கிழித்துவிட்டது. எப்படி மனம் வந்தது எமனுக்கு? மாணவர்களின் ஆத்மார்த்தமான பேராசிரியர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், கடந்தவாரம் திண்டுக்கல் வந்து தனக்கு 1950 முதல் 1954 வரை திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் பாடம் கற்றுத்தந்த 95 வயது ஆசிரியர், சின்னதுரை அவர்களைச் சந்தித� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment