கோயில்களில் எனக்குப் பிடித்தது அங்கு இருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் தான். அதுதான் கலையின் உச்சம் என்றே சொல்லலாம். நம் முன்னோர்களின் மிகச் சிறந்த கலை ஆளுமை நம் பழைய கோயில்களில் மட்டுமே இன்னும் கிடைக்கின்றன. நம் வாழ்வின் அறங்களைக் கற்றுக்கொடுத்த இடமாக நம் கோயில்கள் இருந்திருக்கின்றன.
பிரான்ஸில் இருந்து வந்திருந்த திரைப்பட இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஒருவரை யும் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். கிழக்கு வாசல் கோபுரத்தைப் பார்த்தவுடனையே அவர்களின் பயணத் திட்டங்கள் மாறிப் போனது. இரண்டு மணிநேரம்தான் அங்கு இருக்கத் திட்டமிட்டிருந்தோம். புதுச்சேரியில் இருந்த பணிகளையெல்லாம் உடனே தள்ள [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment