நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்தான கோப்புகளை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதில் உள்ள சில விஷயங்கள் அயல்நாடுகளுடனான உறவுகளை பாதிக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 41 கோப்புகள் உள்ளன என்பதை மட்டும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது, அப்போது பாஜக தலைவராக ராஜ்நாத் சிங், நேதாஜியின் மரணத்தைப் பற்றிய மர்மத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட வேண்டும் என்றும், "ஒட்டுமொத்த நாடும் நேதாஜியின் மரணம் பற்றி அறிய பொறுமையின்றி காத்திருக்கிறது" என்று அப்போது ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போதைய மறுப்பு, தகவலுரிமைச் சட்டத்தின் கீழ் சுபாஷ் சந்திர அகர்� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment