2010-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தைராய்டு நோயால் சுமார் 4 கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற் போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் 11 சதவீதம் பேர் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்நோய் பாதிப்பு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு 10 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.
தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பி. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும் இது கழுத்தின் கீழ்ப் பகுதியின் மையத்தில் உள்ளது. உடலில் ஏற்படும் வளர் சிதை மாற்றங்களைக் கட்டுப்படுத்த தைராக்ஸின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. உடலில் உள்ள செல்கள் எந்த அளவு சக்தியை பயன்படுத்த வேண்டும் என்பதை � [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment