Wednesday, April 30, 2014

உலக பொருளாதாரம்: ஆறு ஆண்டுகளில் இந்தியா 10-லிருந்து 3-ஆவது இடம்: உலக வங்கி தகவல்

world_bank
உலக பொருளாதாரத்தில் 2005-ஆம் ஆண்டு 10-ஆவது இடத்திலிருந்த இந்தியா, ஆறு ஆண்டுகளில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி புதன்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதலிடத்திலும், அதற்கு மிக நெருக்கமாக இரண்டாவது இடத்தில் சீனாவும் உள்ளன. இந்த வரிசையில் 2005-ஆம் ஆண்டு 10-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2011-ஆம் ஆண்டு 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், சீனா, இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இரண்டு மடங்காக உள்ளது. 2011-ஆம் ஆண்டு உலகம் முழுவதுமான ப� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி

Chennai Central railway station blast kills one

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை குண்டு வெடித்ததில் பெண் ஒருவர் பலியானர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பெங்களூரில் இருந்து புறப்பட்ட கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 7.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தது.

9-வது நடைமேடைக்கு ரயில் வந்து சேர்ந்த சில நிமிடங்களில் ரயிலில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் எஸ்-4, எஸ்-5 பெட்டிகள் சேதமடைந்தன.

குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஸ்வாதி (22) என்ற இளம் பெண் பலியானார். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது � [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

மத அடையாளத்தை துறப்பதே பாஜகவின் மிகப்பெரிய சவால்: அமர்த்தியா சென்

Amartya Senநரேந்திர மோடி பிரதமராவது தனக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும். மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என ஒரு சிலர் கூறுவதிலும் தனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமரத்தியா சென்.

'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில்: "அரசாங்கத்தை பிடிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்பது கேலிக்கூத்தானது. அரசாங்கத்தை பிடிக்கவில்லை என்றால் அதைத்தான் மாற்ற வேண்டும்.

மோடி பிரதமராவதில் எனக்கு மட்டுமல்ல பெரும்பாலான இந்தியர்களுக்கு உடன்பாடு இல்லை. ராமர் கோயில் கட்டுவதை பாஜக முன்னிலைப்படுத்தாதது நல்லது. ஆனால் இதை மட்டுமே வைத்துக் கொண்டு இந்து - முஸ்லீம் பிரிவினையை தனது எண்ண ஓட� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

சென்னை, கொழும்பு புதையுறும் நகரங்களா?

indian_flood

நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக நிலவியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்கள் இதனால் கூடுதலாக பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

ஏற்கெனவே, சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் கடுமையான பாதிப்புக்கள் காரணமாக புவியானது வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதன் விளைவாக கடலின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துவருவதால் சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்களின் கடற்கரையோர பகுதிகள் படிப்படியாக கடலில் மூழ்கும் ஆபத்து அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருக்கிறாரகள். இத்தகைய எச்சரிக்கைகளுக்க� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Tuesday, April 29, 2014

வங்கக் கடலில் எம்.எச்.370 விமான பாகங்கள் கண்டுபிடிப்பு?

மாயமான எம்.எச்.370 மலேசிய விமானத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் பாகங்களை வங்கக் கடல் பகுதியில் கண்டுபிடித்துள்ளதாக, ஆஸ்திரேலிய கடல்சார் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

எம்.எச்.370 தேடலில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல் கவனத்தைப் பெற்றுள்ளது.

கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற எம்.எச்.370 விமானம், கடந்த மாதம் 8-ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்ற யூகத்தில் இதுவரை தேடல் நடைபெற்று வந்தது. பல்வேறு நாடுகளின் கப்பல்கள் அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதியில் இருந்து சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கக் கட [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Monday, April 28, 2014

சவுதியில் மெர்ஸ் நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்தது

saudi mers virusரியாத், ஏப்.28- கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிய கண்டத்தில் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான உயிர்களை பறித்துச் சென்ற 'சார்ஸ்' கிருமிக்கு இணையான 'மெர்ஸ்' கிருமியின் தாக்குதலால் பரவி வரும் மர்ம நோயானது, கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டாலும் இதற்கான மாற்று மருந்தோ, தடுப்பு மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் 'மெர்ஸ்' மர்ம நோய் தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியில் ஓமன் நாட்டில் உள்ள சிலவகை ஒட்டகங்களின் மூலம் இந்நோய் பரவியிருக்கலாம் என்பது உறுதி செய்யப்பட்டது. மத்தியக் கிழக்கு நாடுகளில் இந்த நோய் முதலில் காணப்பட்டதால் இதற்கு மெர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. சாதாரண சளியுடன் இண� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் உள்பட 683 பேருக்கு தூக்கு தண்டனை

egypt-flagஎகிப்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த போராட்டங்களின்போது, படுகொலை மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அதிபர் மோர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் உட்பட 683 பேருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது மோர்சி, ராணுவத்தால் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு தலைநகர் கெய்ரோ உள்பட பல இடங்களில் கடந்த வருடம் போராட்டம் நடத்தப்பட்டது. அவரது ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் போலீசார் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மோர்சிக்கு ஆதரவான முஸ்லிம் சகோதரத்துவ இயக� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Sunday, April 27, 2014

மலேசிய விமானத்தை தேடும் பணி 90 சதவீதம் நிறைவு

பெர்த்: மாயமான மலேசிய விமானத்தை, இந்திய பெருங்கடலில் தேடும் பணி, 90 சதவீதம் முடிந்து விட்டதால், இது தொடர்பான அறிக்கையை, மலேசிய அரசு, அடுத்த வாரம் ?வளியிட முடிவு செய்து உள்ளது. 239 பேர் : மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து, சென்ற மாதம், 8ம் தேதி, சீனாவுக்கு புறப்பட்ட விமானம் மாயமானது. இந்தியர்கள், ஐந்து பேர் உட்பட, 239 பேர் இந்த விமானத்தில் பயணித்தனர். இந்த, விமானம், இந்திய பெருங்கடலில், மூழ்கியிருக்கலாம், என்ற நம்பிக்கையில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை, மலேசிய விமானத்தின் எந்த ஒரு பாகமும் கிடைக்கவில்லை. ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் மூலமும், கருப்பு பெட்டியை அறிய கூடிய "ப்ளுபின்-21' சாதனம் மூலமும், விமானம் தேடப்பட்டு வருகிறது. இந்திய பெருங்கடலில், விமானத்த [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை: ஜி-7 நாடுகள் முடிவு

russia flagவாஷிங்டன்
உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக அந்த நாட்டின் மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க ஜி-7 நாடுகள் தீர்மானித்துள்ளன. இது குறித்து, ஜி-7 அமைப்பில் இடம்பெற்றுள்ள கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஆகியோரும் இணைந்து கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க ஜி-7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். உக்ரைனில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் த [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Saturday, April 26, 2014

தமிழக மின் வாரிய நஷ்டம் ரூ.75,000 கோடியாக அதிகரிப்பு: மின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த திட்டம்?

xelectricity_1864986h.jpg.pagespeed.ic.RGVGLWp5NIதமிழக மின் வாரியத்தின் நஷ்டம் ரூ.45 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.75 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க, மின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கடந்த 2005-ம்ஆண்டுக்குப் பிறகு 2011-ம் ஆண்டுவரை மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதன்காரணமாக 2011-ம் ஆண்டு வரை மின் வாரியத்துக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மின் வாரியம் திவாலாகும் நிலையில் இருந்ததால் வங்கிகள் அதற்கு கடன் கொடுப்பதை நிறுத்தின.

இதைத் தொடர்ந்து 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், மின் துறையை வளப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன்படி, மின் வாரியத்தின் கடன� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

மோடி சர்க்கார்

modi kingdom விடுதலை

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியல்: மோடியை முந்தி கேஜரிவால் முதலிடம்

modi
அமெரிக்காவின் "டைம்' பத்திரிகை நடத்திய "உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்' பட்டியல் தொடர்பான கருத்துக் கணிப்பில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் முதலிடத்தைப் பிடித்துள்ளார். உலகில் 2014-ஆம் ஆண்டில் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் தொடர்பாக "டைம்' பத்திரிகை அதன் வாசகர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆதரவாக 2,61,114 வாசகர்கள் வாக்களித்துள்ளனர். மோடிக்கு ஆதரவாக 1,64,572 வாசகர்கள் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக 96,070 வாசகர்கள் வாக்களித்துள்� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Friday, April 25, 2014

அப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்தியவர்கள் ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போடுவதில் மவுனம் சாதிப்பது ஏன்?கபில் சிபல்

kabil-sibal300

புதுடெல்லி,

அப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்திய பா.ஜனதாவினர், ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் மவுனமாக இருப்பது ஏன்? என்று கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜீவ் கொலையாளிகள் ராஜீவ் காந்தி கொலையாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, கருணை மனு மீது முடிவு எடுக்க காலதாமதம் ஆனதை காரணம்காட்டி சுப்ரீம் கோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது. இந்த நிலையில் அந்த 3 பேர் உள்பட ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.இதனை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோ [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

குவர்னிகா: போரில் எழும் ஓலம்

qwarnika piccasa

1937ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, ஒரு திங்கள் கிழமையின் பிற்பகல் பொழுது, ஸ்பெயினின் வட எல்லைக்கருகில் உள்ள குவர்னிகா என்னும் சிறிய நகரம் உழைத்துக் களைத்துப் போயிருந்தது. ஏனெனில் அன்று அந்த நகரத்தின் சந்தை கூடும் தினம். கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு ஒரே இடத்தில் கூடுவார்கள். அதனால் காலையிலிருந்து ஜனநெரிசலும், வியாபாரக் கூச்சலுமாக இருந்த நகரம் சற்றே ஆசுவாசம் கண்டிருந்தது.

சற்றும் எதிர்பார்த்திராத அந்த வேளையில், சரியாக 4:30 மணிக்கு, மேகங்களுக்கு இடையில் மேகமாக இருந்து திடீரென உருவம் பெற்றதைப் போல ஜெர்மனியப் போர் விமானங்கள் வெளிப்பட்டன. அவற்றின் இரைச்சலை என்னெவென்று பிரித்தறிவதற்குள் அவை சரமாரியாகக் குண� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

புத்தர் படத்தைக் கையில் பச்சை குத்திய‌ பிரிட்டிஷ் பெண்ணை வெளியேற்றியது இலங்கை

The_Buddha_at_Mihintale,_Sri_Lanka

புத்தர் படத்தைத் தன் கையில் பச்சைகுத்தி யிருந்ததால், புத்த மதத்தை அவமதித்தார் என்று கூறி சுற்றுலா வந்த 37 வயது பிரிட்டிஷ் பெண்மணியை நாட்டை விட்டு வியாழக்கிழமை வெளியேற்றியுள்ளது இலங்கை அரசு.

கடந்த ஏப்ரல் 21-ம் தேதி கொழும்புக்கு சுற்றுலாப் பயணியாக வந்தார் நவோமி கோல்மேன். அவர் தன் வலது கையில் தாமரை மலர் மீது அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் படத்தைப் பச்சை குத்தியிருந்தார். புத்த மதம் பெரும்பான்மையாக உள்ள இலங்கை யில் இத்தகைய நடவடிக்கைகள் மதத்தை அவமதிக்கும் செயலாகக் கருதப்படுகின்றன. எனவே, அவர் இலங்கை காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

தான் புத்தரின் பக்தர் எனவும், அவர் மீது கொண்ட ஈடுபாட [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

வாக்களர் பட்டியலில் 2 லட்சம் பெயர்கள் விடுபட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்டது தேர்தல் ஆணையம்

election-commission-235

மும்பை,

மகாரஷ்டிராவில் வாக்காளர் பட்டியலில்  எற்பட்ட குளறுபடி  தொடர்பாக, தேர்தல் கமிஷன் மன்னிப்பு கோரியது. மக்களவை தேர்தலுக்கான 6 கட்ட தேர்தலில் நேற்று நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலில், கிட்டதட்ட மூன்று லட்சம் வாக்களர்களுடய பெயர் வாக்களர் பட்டியலில் இல்லாததால் பெரும் அதிருப்தி அடைந்தனர்...இதில் எச்.டி.எப்.சி தலைவர் தீபக் பரேக், மற்றும் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மற்றும் மராத்தி நடிகர் அதுல் குல்கர்னியு ஆகியோரும் அடங்குவர். வாக்களர் பட்டியலில் பெயர் இடம் பெறாதது குறித்து கோர்ட்டை நாட போவதாகவும் வக்காளர்கள்  மிரட்டினர். இந்த நிலையில், வாக்களர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக நாங்கள் மன்னிப்பு கோருவதாகவும் [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

இலங்கை சிறுமியின் ஓவியம் ஐநா அமைப்பில் தேர்வு

140424162642_un_srilankan_girl_drawing_304x171_bbc_nocredit

ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்துக்கான ஆசிய பசிபிக் பிராந்திய சிறார் ஓவியப்போட்டியில் இந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த எட்டுவயது மாணவியின் ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக அந்த சிறுமிக்கு ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசும், நைரோபியில் நடக்கும் இந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்கு அவருக்கும், அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியருக்கான விமான பயணச் செலவும் வழங்கப்படும். ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்தின் சார்பில் உலகு தழுவிய அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆண்டுதோறும் பல்வ [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Wednesday, April 23, 2014

வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்து: பாஜக தலைவரைக் கைது செய்ய உத்தரவு

giriraj_singh

பாஜகவின் முன்னாள் அமைச்சரும், மக்களவை வேட்பாளருமான கிரிராஜ்சிங் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவரைக் கைது செய்யும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி அன்று ஜார்க்கண்டில் ஒரு பிரச்சாரத்தில் பேசிய பாஜக தலைவர் கிரிராஜ்சிங் 'மோடியை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை' என்றும் 'அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும்' என்றும் தெரிவித்த கருத்து பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, இன்று பொகாரோ மாவட்டத்தின் துணை மண்� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

அரசு விளம்பரத்துக்காக வரி பணத்தை வீணடிப்பதா? சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி

Tamil_News_large_960967 புதுடில்லி : அரசு சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்கள் என்ற பெயரில், மக்களின் வரிப் பணத்தை, மத்திய, மாநில அரசுகள், வீணடிப்பதை தடுக்கும் வழிமுறைகளை உருவாக்க, மூன்று பேர் அடங்கிய குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ளது. தன்னார்வ அமைப்பு ஒன்றின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு: மத்தியிலும், மாநிலங்களிலும், ஆளும் கட்சியாக இருப்பவர்கள், அரசியல் ஆதாயம் அடைவதற்காக, தங்களை விளம்பரப்படுத்தி கொள்கின்றனர். இதற்காக, மக்களின் வரிப் பணத்தை தவறாக பயன்படுத்தி, விளம்பரம் கொடுக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அரசு சார்பில் விளம்பரம் கொடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவ� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

உடற்பயிற்சியும்-செக்ஸ் உறவும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது- நியூயார்க் ஆராய்சியளர்கள் தகவல்

helthysex

நியூயார்க்

வழக்கமான உடற்பயிற்சியும், 'செக்ஸ் உறவும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்று நியூயார்க் நகரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் அந்தோணி கரேலிஸ் கண்டுபிடித்துள்ளார். உடல் நலம் சீராக, நம் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். செக்ஸ் உறவின்போது, கலோரி நன்கு எரிக்கப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது, 'செக்ஸ் உறவுக்கு முந்தைய விளையாட்டுகளையும் சேர்த்து, 'செக்ஸ்Õ உறவுக்கு 25 நிமிடங்கள் செலவிடுவதாக வைத்துக்கொள்வோம். அதில், ஆண்களுக்கு 100 கலோரிகளும், பெண்களுக்கு 75 கலோரிகளும் எரிக்கப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது. அதாவது, ஆணுக்கு ஒரு நிமிடத்துக்கு 4 கலோரிகளும், பெண்ணுக்கு ஒரு நிமிடத்துக்கு 3 கலோரிகளும் எரிக� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Tuesday, April 22, 2014

500 மில்லியன் பயனாளர்களை தாண்டியது வாட்ஸ் அப்

whatsapp

புதுடெல்லி,

வாட்ஸ் அப் என்னும் மொபைல் மெசேஜ் அப்ளிகேஷன் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இதன்  பயனாளர்கள் இப்போது 500 மில்லியனாக உயர்ந்துள்ளது இதுகுறித்து தலைமை நிர்வாக அதிகாரி ஜான் கோம் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளாவது:-உங்கள் அனைவருக்கும் எங்கள்து நன்றிகள். உலகம் முழுவது அரை பில்லியன் மக்கள் இப்போது வாட்ஸ் அப் மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த சில மாதங்களாக பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ் அப்பின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. மேலு எங்களது பயன்பாட்டாளர்கள் தினமும்  700 மில்லியன் போட்டோ, 100 மில்லியன் விடியோ பகிர்ந்துவருகின்றனர். கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாட்ஸ் � [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

தமிழகத்தில் ஓய்ந்தது பிரசாரம்

tamilnadu
தமிழகத்தில் கடந்த ஒன்றரை மாதமாக தீவிரமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) மாலை 6 மணிக்கு முடிவுக்கு வந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகன், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் தங்களது பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தனர். இதே போன்று பல்வேறு [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

தேர்தல்: தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு: பிரவீண்குமார்

praveen_kumar
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் முதல் முறையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியில் இருந்து வாக்குப் பதிவு தினமான வியாழக்கிழமை காலை 6 மணி வரை இந்த தடையுத்தரவு அமலில் இருக்கும். தமிழகத்தில் கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்கவும், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் முடிந்துவிட்ட நிலையில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

மோடியும் அல்ல, லேடியும் அல்ல, தமிழக வளர்ச்சிக்கு என் டாடிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

xstalin1_1858179h.jpg.pagespeed.ic.dC1dj9tcWp

"தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளுக்கு காரணம் மோடியும் இல்லை, தமிழகத்தின் லேடியும் இல்லை, எல்லாவற்றிற்கும் காரணம் என் டாடி கருணாநிதியே" என திமுக பொருளாளர் ஸ்டாலின் புதுக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

அண்மையில் தென்சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், குஜராத்தின் மோடி, தமிழகத்தில் லேடி இருவரில் யார் சிறந்த நிர்வாகி என்று ஆதரவாளர்களைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, "அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் குஜராத்தின் மோடி அல்ல; தமிழ்நாட்டின் இந்த லேடிதான்" என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Monday, April 21, 2014

சட்டசபை தேர்தலிலும் காங்., தனித்து போட்டி: ராமநாதபுரத்தில் ராகுல் உறுதி

Tamil_News_large_959687 ராமநாதபுரம்: ''அடுத்த தமிழக சட்டசபை தேர்தலிலும், காங்., தனித்து போட்டியிடும். அப்போது, மக்கள் விரும்பும் வகையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்,'' என காங்., துணைத் தலைவர் ராகுல் ராமநாதபுரத்தில் பேசினார். ராமநாதபுரம் காங்., வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, ராகுல் பேசியதாவது: இது, மீனவர்கள் நிறைந்த மாவட்டம் என்பதால், அவர்கள் பிரச்னையை முதலில் பேச விரும்புகிறேன். மும்பையில் உள்ள மீனவர்களை நான் சந்தித்த போது, 'விவசாயத்திற்கு தனி அமைச்சகம் இருப்பது போல, மீனவர்களுக்கும் தனி அமைச்சர் வேண்டும்' என கேட்டுக் கொண்டனர்; அதை காங்., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். இலங்கை கடற்படையால் தாக்கப்படும், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு தர நட [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

முதலாம் உலகப் போரால் விளைந்த நன்மைகள்

140414145503_world_war_one_10_inventions_304x171__nocredit

நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் தொடங்கிய முதலாம் உலகப் போர் சொல்லொணாத் துன்பங்களை ஏற்படுத்தியது என்றாலும், அது சில புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழி வகுத்தது.

போர்க்காலத் தேவைக்காக அந்தக் கண்டுபிடிப்புகள் இருந்தாலும், உலகளவில் அன்றாட வாழ்க்கையில் அவை மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தன. பெண்களுக்கான மாதவிடாய் காலத்து நாப்கின்கள், பேப்பர் கைக்குட்டைகள், தேயிலை துணிப்பொட்டங்கள், ஸிப், துருப்பிடிக்காத எஃகுக் கருவிகள், புறவூதா விளக்கு சிகிச்சை போன்றவற்றை முதலாம் உலகப் போரின் விளைவாய் உருவான முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றங்களாகச் சொல்லலாம்.

பெண்களுக்கான நாப்கின்

சாதாரண � [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

ரஷ்ய மொழி பேசுவோர்க்கு குடியுரிமை: புதிய சட்டத்துக்கு புடின் ஒப்புதல்

140421075234_putin_304x171_afp

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் ரஷ்யக் குடியுரிமை வாங்குவதை எளிதாக்கும் விதமான புதிய சட்டத்துக்கு ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார்.

யுக்ரெய்னுடன் சென்ற மாதம் இணைந்துள்ள யுக்ரெய்னின் க்ரைமீயா பகுதியில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கு ரஷ்யக் குடியுரிமை வழங்குவதாக வந்த சட்டத்தின் நீட்சியாக இந்த அறிவிப்பு வருகிறது. யுக்ரெய்னின் கிழக்குப் பகுதியும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசம்தான். அங்கு வாழும் மக்கள் பலர், யுக்ரெய்னில் கடந்த பிப்ரவரி மாதம் ஐரோப்பிய ஆதரவு அரசாங்கம் ஒன்று பொறுப்பேற்றிருப்பது தொடர்பில் ஆழமான ஐயப்பாடு [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Saturday, April 19, 2014

மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு

canvas7
மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் முதல்வர் ஜெயலலிதா என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். தென்சென்னை திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து எம்.ஜி.ஆர். நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியது:- பாபர் மசூதி இடிப்புக்காக கரசேவைக்கு ஆள்களை அனுப்பியவர் ஜெயலலிதா. இப்போது அதை மறுக்கிறார். அதிமுகவின் நெருங்கிய கட்சிகளான கம்யூனிஸ்ட்டுகள்கூட, "கரசேவைக்கு ஆள்களை ஜெயலலிதா அனுப்பினார்' என்று கூறத் தொடங்கியுள்ளனர். மதச்சார்பற்ற கொள்கையில் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை இல்லை. சேது சமுத்திரத் திட்டம் அண்ணா கனவு கண்ட திட்டம். அதிமுகவின் முதல் தேர்தல� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

தமிழகத்தின் மொத்த வேட்பாளர்களில் 103 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள்: தன்னார்வக் குழு தகவல்

Loksabha_election_2014_62129938603

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் 845 வேட்பாளர்களில் 103 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்று தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு தன்னார்வக் குழு அறிவித்துள்ளது.

அகில இந்திய அளவில் ஜனநாயகத் தேர்தல் சீர்திருத்தம் என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் கீழ் செயல்படும் தேசியத் தேர்தல் கண்காணிப்பு குழு தமிழக வேட்பாளர்களின் குற்றப் பின்னணி, சொத்து மதிப்பு ஆகியவை குறித்து ஆராய்ந்து ஒரு அறிக்கையை தயாரித்துள்ளது. அந்த அமைப்பின் தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் சுதர்சன பத்மநாபன் இந்த ஆய்வறிக்கையை சனிக்கிழமையன்று பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டார்.

அப்போது அவர் கூற� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

கணவன் குடும்பதைக் கொல்ல கள்ளக்காதலனுக்கு 'வாட்ஸ்அப்'பில் ஐடியா கொடுத்த மனைவி

anu
கேரள மாநிலத்தில் ஆற்றகல் அருகே மன்னாபாகம் என்ற பகுதியில் வசிப்பபவர் ஓமணா(67) இவரது மகள் விஜிஸ் (வயது40). விஜிஸ் மனைவி அனுசாந்தி (35). இந்த தம்பதிகளுக்கு சுவஸ்திகா (4).  என்ற குழந்தை உள்ளது. அனுசாந்தி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  அதே நிறுவனத்தில் பணியாற்றும் மேத்யூ(வயது 40) என்பவர் பணிபுரிந்து வந்தார். இருவருக்ம் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில்  நினோ மேத்யூ, அடிக்கடி தனது காரில் அனுசாந்தியை அவரத  வீட்டிற்கு அழைத்து சென்று இறங்கிவிட்டுள்ளார். இதனை கண்ட அனு சாந்தியின் கணவர் விஜிஸ் மற்றும் மாமியார் ஓமணா கண்டித்துள்ளனர். ஆனால் அனுசாந்தி தனது கள [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

வன்முறையை நிறுத்த நடவடிக்கை: மியான்மருக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

Muslims-Burnt-in-Burma மியான்மரின் மேற்கு பகுதி மாகாணமான ராக்கைனில் ஏற்பட்டுள்ள மதக்கலவரத்தை நிறுத்தி, அங்குள்ள உதவிக் குழுவினர்களை பாதுகாக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. மியான்மரில் புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட மோதலில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டனர். வன்முறை காரணமாக இம்மாத துவக்கத்தில் ராக்கைன் மாகாணத்தில் இருந்து உதவிக் குழுவினர்கள் வெளியேறியதால், அங்கு ஆயிரக்கணக்கானோர் உணவு மற்றும் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். இதுகுறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் சமந்தா பவர் கூறியதாவது: மியான்மரில் சீர்திருத்தம் ஏற்� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

12 தங்கக் கட்டிகளை விழுங்கியிருந்த வணிகருக்கு அறுவை சிகிச்சை

gold_bars  

இந்தியத் தலைநகர் டில்லியில், 12 தங்கக் கட்டிகளை விழுங்கியிருந்த வர்த்தகர் ஒருவரின் வயிற்றிலிருந்து அந்தக் கட்டிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

தொடர்ந்து வாந்தி வருகிறது , மலம் கழிக்க முடியவில்லை என்று கூறிய இந்த 63 வயது வர்த்தகர் டில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மனைவியுடன் சண்டை போட்டபின்னர், கோபத்தில் ஒரு பாட்டில் மூடியை விழுங்கிவிட்டதாகக் கூறிக்கொண்ட அவர் உடலில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களால் தம் கண்களையே நம்பமுடியவில்லை. ஆம், பாட்டில் மூடிக்குப்பத [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Thursday, April 17, 2014

தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியையும் குஜராத்தில் மோடி ஆட்சியையும் ஒப்பிட்ட ஸ்டாலின்

mk_stalinகருணாநிதி ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி; மோடி ஆட்சியில் குஜராத்தின் வீழ்ச்சியை ஒப்பிட்டு, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

சேலம் நாடாளுமன்றத் தொகுதியில், ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் உமாராணியை ஆதரித்து ஸ்டாலின் பேசிய போது,  பாரதீய ஜனதா தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. அது உள்ளபடியே நல்ல எண்ணத்தோடு உருவான கூட்டணியல்ல. சந்தர்ப்ப வாதமாக அமைந்திருக்கக் கூடிய கூட்டணி அது. அதில் இடம் பெற்று இருக்கக் கூடியவர்கள் ஏற்கனவே நம்முடைய கூட்டணியில் இருந்தவர்கள் தான். அதுமட்டுமல்ல நம் கூட்டணியில் நின்று வெற்றி பெற்று மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் தான். அப்படி அமைச்சர்களாக இருந்த [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Wednesday, April 2, 2014

ஆரோக்கிய உடலுக்குத் தேவை அன்றாடம் அரைகிலோ காய்கனி!

Health comprises vegitables body needs on a daily basis! மனித உடல் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றை செய்திருக்கிறார்கள். அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அரைகிலோ காய்கனிகளை அன்றாடம் உண்பது அவசியம் என்கிறார்கள் சுமார் 65 ஆயிரம் பேரிடம் ஆய்வு செய்திருக்கும் இந்த விஞ்ஞானிகள். இதுநாள்வரை ஒரு 25 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் ஒரு நாளைக்கு குறைந்தது 400 கிராம் அளவுக்காவது காய்கறி மற்றும் பழங்களை உண்ணவேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரை செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் தற்போது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 560 கிராம், அதாவது அரைகிலோ� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Tuesday, April 1, 2014

சிலியை குலுக்கியது நிலநடுக்கம்(8.2ரிக்.,) - 70 ஆயிரம் பேர் வெளியேற்றம்

Tamil_News_large_946756 சாண்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலியில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவாகியிருக்கும் இந்த நடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.   தென்பசிபிக் கடல் ஒட்டிய சிலியின் இக்யூகியூ தீவு பகுதிகள் இந்த நிலநடுக்கத்தில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் இந்த நடுக்கம் ஏற்பட்டது. வீடுகளில் இருந்தவர்கள் பெரும் பீதியுடன் வீதிகளுக்கு வந்தனர். பல வீடுகள் இடிந்து விழுந்தன, 8 முறை இந்த நடுக்கம் உணரப்பட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். 20. 1 கிலோ மீட்டர் ஆழம் வரை இந� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்