1937ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, ஒரு திங்கள் கிழமையின் பிற்பகல் பொழுது, ஸ்பெயினின் வட எல்லைக்கருகில் உள்ள குவர்னிகா என்னும் சிறிய நகரம் உழைத்துக் களைத்துப் போயிருந்தது. ஏனெனில் அன்று அந்த நகரத்தின் சந்தை கூடும் தினம். கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு ஒரே இடத்தில் கூடுவார்கள். அதனால் காலையிலிருந்து ஜனநெரிசலும், வியாபாரக் கூச்சலுமாக இருந்த நகரம் சற்றே ஆசுவாசம் கண்டிருந்தது.
சற்றும் எதிர்பார்த்திராத அந்த வேளையில், சரியாக 4:30 மணிக்கு, மேகங்களுக்கு இடையில் மேகமாக இருந்து திடீரென உருவம் பெற்றதைப் போல ஜெர்மனியப் போர் விமானங்கள் வெளிப்பட்டன. அவற்றின் இரைச்சலை என்னெவென்று பிரித்தறிவதற்குள் அவை சரமாரியாகக் குண� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment