மாயமான எம்.எச்.370 மலேசிய விமானத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் பாகங்களை வங்கக் கடல் பகுதியில் கண்டுபிடித்துள்ளதாக, ஆஸ்திரேலிய கடல்சார் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
எம்.எச்.370 தேடலில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல் கவனத்தைப் பெற்றுள்ளது.
கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற எம்.எச்.370 விமானம், கடந்த மாதம் 8-ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்ற யூகத்தில் இதுவரை தேடல் நடைபெற்று வந்தது. பல்வேறு நாடுகளின் கப்பல்கள் அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதியில் இருந்து சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கக் கட [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment