சாண்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலியில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவாகியிருக்கும் இந்த நடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். தென்பசிபிக் கடல் ஒட்டிய சிலியின் இக்யூகியூ தீவு பகுதிகள் இந்த நிலநடுக்கத்தில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் இந்த நடுக்கம் ஏற்பட்டது. வீடுகளில் இருந்தவர்கள் பெரும் பீதியுடன் வீதிகளுக்கு வந்தனர். பல வீடுகள் இடிந்து விழுந்தன, 8 முறை இந்த நடுக்கம் உணரப்பட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். 20. 1 கிலோ மீட்டர் ஆழம் வரை இந� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment