மியான்மரின் மேற்கு பகுதி மாகாணமான ராக்கைனில் ஏற்பட்டுள்ள மதக்கலவரத்தை நிறுத்தி, அங்குள்ள உதவிக் குழுவினர்களை பாதுகாக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. மியான்மரில் புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட மோதலில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டனர். வன்முறை காரணமாக இம்மாத துவக்கத்தில் ராக்கைன் மாகாணத்தில் இருந்து உதவிக் குழுவினர்கள் வெளியேறியதால், அங்கு ஆயிரக்கணக்கானோர் உணவு மற்றும் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். இதுகுறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் சமந்தா பவர் கூறியதாவது: மியான்மரில் சீர்திருத்தம் ஏற்� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment