வேதியியலில் 2009-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற வெளிநாடு வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் வெற்றி மகுடத்தில் மற்றொரு ரத்தினக் கல்லாக, பிரிட்டனில் உள்ள ராயல் சொஸைட்டியின் தலைவர் பதவி அவருக்குக் கிடைத்திருக்கிறது.
கி.பி. 1660-ல் இரண்டாம் சார்லஸ் மன்னரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, அந்நாட்டின் அறிவியல் துறையில் மதிப்பு மிக்க அமைப்பாகும். இதன் தலைவராக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தேர்வுசெய்யப்பட்டிருப்பது அவருக்கு மட்டுமல்ல, அவர் பிறந்த இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறது. இந்த அமைப்பின் தலைவர்களாகப் பதவி வகித்தவர்களின் பட்டியலைப் பார்க்கும்போது, இந்தியர்களுக்கு � [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment