காபூல்: ஆப்கானிஸ்தானின், வடக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், ஒரு கிராமமே மண்ணுக்குள் புதைந்தது. இங்கு வசித்த, 2,100 பேர், இறந்து விட்டதாக அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தானில், அதிபர் ஹமீத் கர்சாய் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பத்ஷான் மாகாணம், தஜிகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் உள்ள எல்லை பகுதியில் அமைந்துள்ளது. மலைகள் நிறைந்த இந்த மாநிலத்தில், மழைக் காலங்களில், அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். ஆப்கனின் பல பகுதிகளில், கடந்த சில தினங்களாக, கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை, இந்த மாகாணத்தில் உள்ள, ஆப் கோஷ்க், அபிபரிக் கிராமங்க ள� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment