ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் 'அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டியே தீருவோம்' என்ற போர் முழக்கம் வலதுசாரிகளிடமிருந்து உச்ச ஸ்தாயியில் ஒலிப்பது வழக்கமாகிவிட்டது. அயோத்தியில் விசுவ இந்து பரிஷத்தின் தலைமையகப் பகுதியில் கோயில் கட்டுமானத்துக்கான கற்கள் வந்து இறங்கியிருப்பதும் அதற்கு 'சிலா பூஜா' என்ற பெயரில் சில சடங்குகள் செய்யப்பட்டிருப்பதும் வரப்போகும் ஆபத்துக்குக் கட்டியம் கூறுகின்றன. இன்னும் ஓராண்டில் சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் உத்தரப் பிரதேசத்தில் இப்போதே மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் வேலைகள் தொடங்கிவிட்டன.
கோயில் கட்டுவதற்குத் தேவைப்படும் என்ற எதிர்பார்� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்