கிரிமியா விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை ஆதரிக்க மாட்டோம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த இணைப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக உள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகளின் மீது பொருளாதாரத் தடைகளை (சொத்துகளை முடக்குதல்) கொண்டு வரவும், விசா உள்ளிட்டவற்றை வழங்காமல் நிறுத்திவைக்கவும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை இந்திய அரசு புதன்கிழமை அறிவி� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment