மதிமுக சனிக்கிழமை வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பாஜக-வின் தேசியக் கொள்கைகளுக்கு முரண்பாடான பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இதனால், பாஜக புதிய ஆட்சி அமைத்தால், மதிமுக-வின் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மதிமுக தேர்தல் அறிக்கையில் இலங்கைப் பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு, விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விடுதலைப் புலிகளுக்கான தடையை கடந்த காலங்களில் ஆதரித்த பாஜக, தற்போதும் விடுதலைப் புலிகளுக்கோ, தமிழீழத்துக்கோ ஆதரவு தரவில்லை. மாறாக மக்களவை பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கை அதிபர் ராஜபக்சேவை நேரில் சந்தித்து, இலங்கையின் மறுவாழ்வுத் திட்டங்களைப் பாராட்ட� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment