Wednesday, March 26, 2014

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு

un metting
இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தீர்மான குறித்து இந்தியா தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்த தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை முன்னாள் அரசு அதிகாரி தயன் ஜெயதிலகே, 2009ல் விடுதலை புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தபின் எழுத்துமூலம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசு தவறியதால் சர்வதேச நாடுகள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தினமணி


மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment