குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு விசா மறுக்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா மீண்டும் கூறியுள்ளது. தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை துணையமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால், "மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் எந்தவொரு தலைவரையும் அமெரிக்கா வரவேற்கும்' என்றார். இதையடுத்து மோடி பிரதமரானால் விசா தருவதற்கு அமெரிக்கா சம்மதித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி (படம்) கூறியதாவது: மோடி அமெரிக்காவிடம் விசா கேட்டு விண்ணப்பித்தால் வரவேற்போம� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment