அமைதி நிலவுகின்ற இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு உயிர் கொடுக்க வெளிநாடுகளில் உள்ள பிரிவினைவாதிகள் முனைந்திருப்பதைத் தடுப்பதற்காகவே தேடுதல் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்று இலங்கை இராணுவ தளபதி கூறியுள்ளார். பொதுமக்களை அச்சப்படுத்துவதற்காக இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்று திங்களன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். "அழிக்கப்பட்டுள்ள எல்ரீரீயினர் மீண்டும் தலையெடுப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது. இதனை நாங்கள் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றோம். தேசிய பாதுகாப்புக்க� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment