Monday, March 17, 2014

கால் நூற்றாண்டுக்குப் பிறகு காங். தனித்துப் போட்டி- ஆலந்தூர் இடைத் தேர்தலில் களமிறங்குகிறது

xcongress 25 ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளது. ஏப்ரல் 24-ல் நடைபெறவுள்ள ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தனித்து களமிறங்குகிறது காங்கிரஸ். கடந்த 1952-ல் நடந்த முதல் சட்டசபைத் தேர்தலில், ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 152 தொகுதிகளில் வென்றது. 1957 தேர்தலில் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 151 தொகுதிகளிலும் 1962ல் 139 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து, பக்தவத்சலம் தலைமை யிலான காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 51 இடங்களைப் பெற்றது. பின்னர் முதன்முதலாக 1971-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் என்றும் காமர� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment